என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்வு குழு தலைவர்"
புதுடெல்லி:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற தொடக்க வீரர் முரளி விஜய் சரியாக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ பேசவில்லை. நீக்கத்துக்கான காரணத்தை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
ஆனால் முரளி விஜய்யின் கருத்தை இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
முரளி விஜய் அணியில் இருந்து ஏன் நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்து எனது சக தேர்வாளர் தேவங்காந்தி அவரிடம் தெளிவாக தெரிவித்து விட்டார். அதன்பிறகு முரளி விஜய் இப்படியொரு கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
ஷிகர் தவான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகள் கொடுத்த பின்புதான் நீக்கும் முடிவை எடுத்தோம் என்றார். #MuraliVijay #Indianteamselectioncommittee